சட்டமன்றத் தேர்தல் கார் வாடகை கொடுக்காமல் திருச்செந்தூர்ஆர்டிஓ இழுத்தடிப்பு -வாகன உரிமையாளர்கள் தவிப்பு

0
1273

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் என அனைத்து பகுதிகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் வாடகைக்கு கார்களை அமர்த்தியது. அக்கார்கள் 4 நாட்கள் ஈடுபடுத்தப்பட்டன.

சட்டமன்ற தொகுதி தலைமையிடமான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகங்கள் மூலமாக கார்களுக்கு டீசல் போடப்பட்ட நிலையில், வாடகை மற்றும் டிரைவர் படியை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வாகன உாிமையாளர்களிடம் தொிவிக்கப்பட்டது.

பத்து தினங்களுக்குள் வாடகை பணம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் வாடகை கார்களுக்கு இன்னும் பணம் வழங்காமல் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இழுத்தடித்து வருகின்றனர். பிற தொகுதிகளில் வழங்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, செலவுக்கு பணமின்றியும், மாதத்தவணை செலுத்த முடியாமலும் வாகன உாிமையாளர்கள் தவித்து வரும் நிலையில் உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாடகை வாகன உாிமையாளர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here