தூதர் திரிஷாவுக்கு வந்த நல்லெண்ணம்

0
692

யுனிசெப் அமைப்பின் சிறாகளுக்கான நல்லெண்ண தூதராக நடிகை திரிஷா செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட தூதர் வேலைக்கெல்லாம் கவர்ச்சி மிக்க நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர்களையே தேர்ந்தெடுப்பர். சமூகப்பணியாற்றும் ‘லகடு’களையெல்லாம் எடுத்தால் ‘மாஸ்’ போய்விடும் அல்லவா?

யுனிசெப் நல்லெண்ண தூதரான திரிஷா புயல் வேக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறார்களுக்கு அறிவுரைகளை அள்ளிவழங்கி வருகிறார். நேற்று முன்தினம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ‘ திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்ற கூடாது. இளைஞர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும் ’ என்று திருவாய் மலர்ந்தார்.

நேற்று வேறொரு நிகழ்ச்சியில் பேசியபோது, பள்ளி மாணவி ஒருவர் ‘96’ போன்ற பள்ளிக்கூடங்களில் எடுக்கும் படங்களால் சிறுமிகள் மனது கெடுவது பற்றி கருத்து கேட்டார். அப்படத்தில் நடித்த திரிஷா இந்த நேரடி ‘அட்டாக்’கால் நிலைகுலைந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு வேண்டும். பள்ளிகளில் எடுக்கப்படும் காதல் காட்சிகளால் மாணவர்கள் மனம் பாதிக்கப்படுவது உண்மை’ என்றார். மேலும், பேசினால் சிக்கல் என்று கருதி உடனடியாக ‘பிரஸ் மீட்’டை முடித்துக்கொண்டார்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ‘சிறார் காதல் காட்சியால் கேடு இல்லை’ என்று முழங்கியவர் திரிஷா. இளமையை காட்டி நடித்து நன்கு சம்பாதித்துவிட்டு, இப்போது இன்னொரு பட வாய்ப்பாக உள்ள நல்லெண்ன தூதராக மாறி நல்வாக்கு கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here