மழையால் அறுந்த மின் வயரை மிதித்த மூதாட்டி பலி

0
662

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (65). இவர் இன்று காலை அங்குள்ள காட்டு பகுதியில் தென்னை மட்டை பொறக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள மின்சார வயரில் அகத்தி மரம் பட்டு சாய்ந்து மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. மின்சார வயர் அருந்தது தெரியாமல், பஞ்சவர்ணம் மின்சார கம்பியில் சிக்கி தோட்டத்தில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, பாலமேடு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக, மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here