அரசு மருத்துவமனையில் காலாவதி இன்சுலின் – சர்க்கரை நோயாளி ஷாக்

0
779

மதுரை தத்தனேரியில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த, . 5 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரை எடுத்த வந்த காளமேகம் வந்துள்ளார். எனினும், சர்க்கரை அளவுகுறையவில்லை.

இந்தநிலையில், கடந்த மாதம் மதுரை தத்தநேரியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை செய்த ஆவணங்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை மாற்றித் தருகிறேன். என்று பரிசோதித்துப் பாருங்கள் மாற்றம் ஏதுமில்லை என்றால், அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பதாக என்று சொல்லி அனுப்பி வைத்தனர். எனினும், சர்க்கரை அளவு அவருக்கு தொடர்ந்து அதே நிலையில் இருந்து வந்தது.

மீண்டும் பரிசோதனைக்காக நேற்று காலையில் மருத்துவரை சந்தித்தார். அப்பொழுது, இன்சுலின் எடுத்துக்
கொள்ள.மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள ஊசி போடும் இடத்திற்கு கொண்டு சென்று இரண்டு பாட்டில் இன்சிலின் வாங்கிக் கொண்டார்.
அது கடந்த பிப்ரவரி மாதத்துடன்2022 காலாவதியாகி இருப்பதை கண்டு அதிர்ந்தார்.

உடனடி யாக பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முறையிட்டார். உடனடியாக அங்கு ஒரு பாட்டில்l செல்லுபடியாகும் இன்சுலின் கொடுத்தார்கள். அரசு மருத்துவமனையிலேயே காலாவதியான இன்சுலின் கொடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் இதை செலுத்தி இருந்தால் அவருக்கு எந்த பக்க விளைவுகள் ஏற்படும் என தெரியவில்லை. எனினும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் அளவிற்கு இ.எஸ்.ஐ. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here