வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுப்பிரமணி(50) தற்போது இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுப்பிரமணி நேற்று இரவு குடித்துவிட்டு வந்து தனது மகளை திட்டியுள்ளார். இதனை இளையமகன் வினோத்(25) தட்டிகேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியால் வினோத்தை சுட்டுள்ளார். குண்டடிபட்ட வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சுப்பிரமணி அங்கிருந்து தலைமைறைவாகி விட்டார்.
இரவு முழுவதும் தேடி அப்பகுதியில் சுற்றி திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர்.












