மழைக்காலம் என்பதால் காய்கறிகளின் விலை ஓரளவு உயர்ந்து விவசாயிகள் பெருமூச்சு விடும் அளவு இருந்தது. குறிப்பாக தக்காளி விலை மிக உயர்ந்தது. ஆனால் மழை காலம் முடிய காய்கறி விலை குறைந்து வருகிறது.
குறிப்பாக வெங்காய உற்பத்தி அதிகம் நடக்கும் ஆந்திராவில் அதன் விலை மிகவும் குறைந்தது. விலை வீழ்ச்சி காரணமாக கிலோ 4 விற்றதால் அங்குள்ள விவசாயி ஒருவர் வெங்காய மூடைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்.
கிலோ 30 ரூபாய்க்கு குறைந்தாலே அடக்க உற்பத்தி செலவுக்கு கட்டுபடியாகாது என்று விவசாயிகள் தெரிவித்தனர். அப்படி விவசாயிகளுக்கு 30 ரூபாய் கிடைக்க வேண்டுமென்றால், இடைத்தரகர் லாபம் போக சந்தையில் வெங்காயம் கிலோ 50 ரூபாய் ஆக இருக்க வேண்டும்.










