2 மாதங்களில் 5 கரடிகள் விசிட்: கடையத்தில் பீதி

0
1245


தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரண்டே மாதங்களில் ஐந்து கரடிகள் பிடிபட்டுள்ளன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குபட்ட கடையம் வனச்சரகத்தில் கடனாநதி அணைப்பகுதியில் விளை நிலங்களில் உள்ள பயிர்களையும் சேதப்படுத்திய கரடியை பிடிக்க கோரி அப்பகுதி விவசாயிகள் விடுத்திருந்தனர்.
காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கரடி வேட்டையை தொடங்கினர்.
வனத்துறையினர் வைத்த கூண்டில் பங்களா குடியிருப்பு திரவியம் என்பவர் தோட்டத்தில் நடமாடிய கரடி நேற்று இரவு சிக்கியது. ஏப்ரல் 26 முதல் இது வரை கடையம் பகுதியில் ஐந்து கரடிகள் பிடிபட்டுள்ளன.
இதற்கு முன்பு பங்களா குடியிருப்பு, சிவசைலம் கல்யாணிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள மா பலா வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்திய ஐந்து வயது உள்ள கரடி, வீ.கே புரம் முதலியார்பட்டி மகபூப் பாபு என்பவர் தோட்டத்தில் ஒரு பெரிய கரடி ஆகியன ஒரு வாரத்துக்குள் சிக்கியுள்ளன.
பிடிபட்ட கரடிகள் அடர்வனப் பகுதியில் கொண்டு விடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here