சாத்தான்குளத்தில் அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் மற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதயவியல் மருத்துவம், கண் மருத்துவம், நுரையீரல் சிறப்பு பிரிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து இங்கு வந்திருந்த பொது மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பட்டயங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.









