கொடைக்கானல் வனப்பகுதியில் மனித ஆக்கிரமிப்பால் தொடர்ந்து மடியும் காட்டெருமைகள்

0
693

மனிதர்களின் வன ஆக்கிரமிப்பால் அங்கு வாழும் உயிரினங்கள் பெரும் ஆபத்தை சந்திக்கின்றனர் பேருயிர் யானை யானை முதல் சிற்றுயிர்கள் ஆன பூச்சிகள் வரை அறிந்து உயிரின சமன்பாடு சீர்குலைகிறது. மேலும் மேலும் மரங்களை ஆக்கிரமித்து தங்களுடைய செயற்கையான நாகரீக நடைமுறைகள் மூலம் அந்த உயிர்களுக்கு மனிதன் தீங்கு விளைவித்து வருகிறான் இதை அரசும் கட்டுப்படுத்தத் தவறி விடுகிறது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் பெரும்பாலான‌ இட‌ங்க‌ள் வ‌ன‌ப்ப‌குதியாகவே இருந்து வ‌ருகிற‌து. கொடைக்கான‌ல் என்றாலே பொதும‌க்க‌ள் ம‌ற்றும் சுற்றுலா ப‌ய‌ணிகள் மன‌தில் காட்டெருமைக‌ள் நினைவுக்கு வ‌ரும். கொடைக்கான‌ல் வ‌ன‌ப்ப‌குதி முழுவ‌தும் வ‌ன‌ வில‌ங்குக‌ளான‌ காட்டெருமை, யானை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட‌ அரிய‌ வ‌கை உயிரின‌ங்க‌ள் வாழ்ந்து வ‌ருகின்றன .

தொட‌ர்ந்து அண்மை கால‌மாக‌ வ‌ன‌ப்பகுதியில்இருக்கும் காட்டெருமைக‌ள் அதிக‌மாக‌ ந‌க‌ர்ப‌குதிக்குள் வ‌ல‌ம் வ‌ர‌ துவ‌ங்கின. அதான் அதாவது வனப்பகுதிகள் நகர் பகுதிகளாக ஆனதால் அவ்வாறு நமக்கு தோற்றமளித்தது

இவ்வாறாக நகராக ஆக்கிரமிக்கப்பட்ட வனப் ப‌குதிக்குள் வ‌ல‌ம் வ‌ரும் காட்டெருமைகள் குப்பை தொட்டிக‌ளில் போடப்பட்ட குப்பைக‌ளை தின்று உட‌ல் ந‌லிவ‌டைந்த‌ நிலையில் சுற்றி திரிகின்றன. இந்த‌ நிலையில் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ சுமார் 10க்கும் மேற்ப‌ட்ட‌ காட்டெருமைக‌ள் உயிரிழ‌த்துள்ள‌து

பொதும‌க்க‌ள் ம‌ற்றும் வ‌ன‌ உயிரின‌ ஆர்வ‌ல‌ர்க‌ளிடையே அதிர்ச்சியை ஏற்ப‌டுத்தி உள்ள‌து.

இது குறித்து வ‌ன‌த்துறை அதிகாரிக‌ளும் முறையான‌ அறிவிப்பும் வெளியிட‌ப்படுவ‌தில்லை என்ற‌ குற்ற‌ச்சாட்டும் எழுந்துள்ள‌து. காட்டெருமைகள் இறப்புக்கான காரணங்கள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here