நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து முன் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 83..43 அடி தண்ணீர் உள்ளது அணைக்கு விநாடிக்கு 7 கன அடித்தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஆண்டு தோறும் மே-1-ந்தேதி முன் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம் . இந்த ஆண்டும் விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து இன்று மணிமுத்தாறு அணையின் பெருங்கால் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி , வைராவிகுளம் , தெற்கு பாப்பாங்குளம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2756.62ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் . இன்று முதல் 13-08-21 வரை 105 நாட்களுக்கு 538.71 அடிக்கு மிகாமல் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு திறக்கப்படும் . நாள் ஒன்றுக்கு 45 முதல் 75 கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.









