கோவை புதிய கலெக்டர் டாக்டர் சமீரன்

0
1292


கோவை மாவட்ட கலெக்டராக கடந்த மார்ச் மாதம் எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார். புதிய அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சமீரன் கடந்த 2012 ஆம் ஆண்டு பேட்ச் ஐ ஏ எஸ் தேர்வில தேர்ச்சி பெற்றவர். திருவனந்தபுரம் அரசு மெடிகல் காலேஜில் மருத்துவ படிப்பு படித்தவர். மேலும் பரமக்குடியில் சப் கலெக்டராகவும், தமிழக மீன் வளர்ச்சி துறை நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here