மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை வரைவு சட்டமாகிறது. அதற்கு இன்று மத்திய அமைச்சரவ இஒப்புதல் வழங்கியுள்ளது.
மும்மொழிக் கல்வி திட்டத்தை அடிப்படையாக கொண்டே இந்த கொள்கை அமைகிறது. ஆறாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக்கற்கலாம்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜவ்டேகர் கூறுகையில், ‘ 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ரமேஷ் பொக்ரியாலும் பேட்டியளித்தார்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலர் அமித் கரே பேசுகையில், ‘ மத்திய மனித வளத்துறை, கல்வித்துறை எனப் பெயர் மாற்றப்படும். வருவாயில் 6{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} கல்விக்கு ஒதுக்கப்படும். முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்வி முறை இருக்கும். இரண்டாம் ஆண்டு புதிய கல்வி முறை அமல்படுத்தப்படும்.
உயர் கல்வியில் முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உயர் கல்விகளை ஒருங்கிணைக்க ஒரே அமைப்பு நிறுவப்படும். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க்கப்படும்.
15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரிகள் என்ற முறை நிறுத்தப்படும். எம்.பில் படிப்பு இனி இல்லை. பொறியியல் போன்ற படிப்புகளில் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு கூட பிறகு படிக்கலாம்.
2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு அடையப்படும்’ என்றார்.
5+ 3+3 என்ற நிலையில் பள்ளி கல்வி வகுப்புகள் வகைப்படுத்தப்படும். மாநில மொழிகளில் ஆன்லைன் பாடங்கள் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.