ப.சி.க்கு இன்று முன்ஜாமீன் வாய்ப்பு

0
1361

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார். வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அப்போது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்படவில்லை என்றால், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.இதற்கிடையே, தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள மேல் முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. இதே போல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்தை இன்று (26-ந் தேதி) வரை கைது செய்ய தடை விதித்த மனுவும் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

எப்படியும் இன்று சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here