சாத்தான்குளம் பகுதியில் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை மர்ம நபர் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









