அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பினரும் அக்டோபர் 18-ந் தேதிக்குள் தங்கள் தரப்பு வாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அக்டோபர் 18-ந் தேதிக்குள் வாதங்களை முடித்துக் கொள்ளுமாறு அரசியல் சாசன அமர்வு கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அயோத்தி வழக்கின் விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














