கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி தலைமையில் 9 கட்சி பிரமுகர்கள் காஷ்மீர் சென்றபோது ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், ‘ நாட்டு மக்கள் ஜம்மு காஷ்மீருடன் தொடர்பு கொள்வது அவசியம். இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பாதை அமைத்து கொடுபப்து அரசின் கடமை’ என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சீதாராம் யெச்சூரி கட்சியினர் குடும்பத்தினரை சந்தித்து பேசலாம். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது’ என்று நிபந்தனை விதித்துள்ளது.
இதேபோல், அன்ந்த்நாக்கில் உள்ள பெற்றோரை சந்திக்க முகமது ஜலீல் என்பவருக்கும் அனுமதி அளித்தது.