சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பில் போலீசார் அமைத்துள்ள சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்லும் ஓட்டுநர்களை கிருமிநாசினி அல்லது சோப்பை பயன்படுத்தி கைகளை நன்றாகக் கழுவி செல்லுமாறு போலீசார்அறிவுறுத்துகின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூறுகின்றனர்.









