கேரளாவில் முன்னணி செய்தி சேனலான ’இந்தியா விஷன்’ டிவி இயக்குநரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக ஹரி நாடார், மூர்த்தி தேவர் இருவர் மீதும் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்கள் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் இந்த புகாரும் சேர்ந்துள்ளதால் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் ஹரி நாடாருக்கு சிக்கல் எழுந்துள்ளது.








