விஷம் குடித்து பைக்கில் சுற்றியவர் சாவு

0
1622

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி வடக்குத் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (57), பீடி வியாபாரி. இவர் நேற்று மாலை குடும்ப பிரச்சினை காரணமாக விஷத்தை குடித்து விட்டு, எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனக் கூறி, அவரது பைக்கை எடுத்துகொண்டு வெளியில் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here