கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பேரூராட்சி ஆளுங்கட்சியான திமுகவின் செல்வாக்கையும் மீறி அதிமுக வசமானது. இது சபாநாயகர் அப்பாவு தொகுதிக்கு உட்பட்டதால், எப்படியேனும் அதிமுக நிர்வாகத்தை கலைத்து விட வேண்டும் என்று பகீரத முயற்சி மேற்கொள்ளப்பட்டது
அதன் அடிப்படையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஒன்றியக் குழு நிர்வாகத்தை கலைக்க இன்று தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ற வேலையை திமுக ஜருூராக செய்து வந்தது
அதற்கிடையே நேற்றே திமுக கவுன்சிலர்கள் பிரேம்குமார்,சண்முகவேல் ஆகிய இரண்டு பேரை திமுகவிலிருந்து அதிமுக கொத்தி தூக்கி விட்டது.
அதிமுக மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா தலைமையில், அமைப்பு செயலாளர் ஏகே சீனிவாசன் முன்னிலையில் கவுன்சிலர்கள் இருவரும் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டம் 12 மணிநடைபெறவில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ்மட்டுமே கூட்ட அரங்கில் இருந்தார்.
பின்பு ஒரு வழியாக காங்கிரஸ் உறுப்பினர் ஜோசபின் சரஸ்வதி மட்டும் வந்தார். சிறிது நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் போடத் துடித்த திமுக உறுப்பினர்களும் ஒருவரான நடை சாரதி கோரிக்கை மனுடன் வந்தார். தேதியை மாற்ற வேண்டும் என்பதற்கு ஏதுவாக உள்ளாட்சி சட்ட விதிகளை குறிப்பிட்டு,’ பேரூராட்சி உதவி இயக்குனர் முன்னிலையில் தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற வேண்டும் ‘ என்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தார்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களின் மன உறுதி ஆரம்பத்தில் இருந்தே திமுக உறுப்பினர்களுக்கு இல்லை. இதனால்,’ இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டுதான் மனக்கோட்டை கட்டுகிறீர்கள் ‘ என்று அதிமுகவினர் அசால்டாக களமாடி வருகின்றனர்.








