சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட் இவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்
நேற்றிரவு, இவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் ஒரு ஆசாமி உள்ளே நுழைந்து அங்குள்ள கோழிகளை மூட்டையாக கட்டி சென்றுள்ளார் இது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இது குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் செய்துள்ளார் புகாரை பெற்ற போலீசார் கோழி திருடனை தேடி வருகிறார்கள்