பிரதமர் மோடி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் 51-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அரவிந்த் கெஜ்ரிவால், நல்ல உடல் நலத்துடன் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ‘உங்கள் வாழ்த்துக்கு நன்றி’ என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உங்கள் பங்களிப்பால் கடந்த முறை 67 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெறும்’ என்று கூறியுள்ளார்












