நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நான்கு மாவட்ட மக்கள் வந்து போகும் இடமாக உள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அடுத்து பெரிய மருத்துவமனையான இங்கு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும், ஒரு பக்கம் உயர்ந்தால் மறுபக்கம் தாழ்வது போல, ஒரு சில மருத்துவர்களின் நடவடிக்கைகளால் மருத்துவமனையின் பெருமை குன்றுகிறது.
இங்குள்ள உடற்கூறு ஆய்வகத்தில் இறந்தவர்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுசான்றிதழ் வழங்கப்படுகிறது. அவ்வாறான போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வாங்க வரும் பெண்களிடம் அங்குள்ள போரென்சிக் மருத்துவர் ஒருவர் தவறாக நடக்க முயற்சிப்பதாக சிறிது காலமாக பேசப்பட்டது.
திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் தன் கணவரின் போஸ்ட்மார்ட்டம் சர்டிபிகேட் வாங்க பல நாட்களாக அலைந்துள்ளார். அங்கிருந்த போரென்சிக் மருத்துவர் அவரை அலைக்கழித்ததோடு, தனியாக வருமாறு பலமுறை நைச்சியமாக பேசியுள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வந்துள்ளார். வேறு வழியின்றி சான்றிதழ் வழங்கும் நிலைக்கு நேற்று தள்ளப்பட்டார். அப்போது அவருடன் வந்தவர்களைவெளியே நிற்கச் சொல்லிவிட்டு அவரை மட்டும் தனியே அறைக்குள் மருத்துவர் அழைத்துள்ளார். அவர் தயக்கத்துடன் சென்றபோது, ’ நீங்க மட்டும் தனியா வந்திருந்தா, எப்போதோ சர்டிபிகேட் கிடைத்திருக்கும் ‘ என்று கூறியதோடு கதவை சாத்தி தாழிட முயன்றுள்ளார். இதனால் பதறிப் போன சகோதரியின் கணவர், தன் மனைவியையாவது அழைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்
வேண்டா வெறுப்பாக அப்பெண்ணை அழைத்துக் கொண்ட டாக்டர், போஸ்ட் மார்ட் டம் சர்டிபிகேட் வாங்க வந்தபெண்ணிடம் நெருங்கி நின்று பேசியதோடு, தேவையில்லாமல் அவரது தனிப்பட்ட விவரங்களை விசாரித்ததோடு, தனது கைபேசி எண்ணைக் கொடுத்து பேசுமாறு கேட்டுள்ளார்.
இதனால் அவமானமடைந்த அந்தப் பெண், இதுகுறித்து வெளியில் வந்து கொழுந்தனிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை டீனை சந்தித்து முறையிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.









