உள்ளாட்சி தேர்தலுக்கு முன் ‘அள்ளு’ : ஊழல் கொழிக்கும் ஊரக துறை நியமனம்

0
2388

 

உள்ளாட்சி தேர்தல் உண்டா, இல்லையா என சிண்டை பிய்த்துக்கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்லா கட்டவும், உள்ளாட்சி அமைப்புகளில் ஆளுங்கட்சியினர் கரத்தை வலுப்படுத்தவும் மகா, ஜகா வேலையில் அரசு இறங்கியுள்ளது.
அதாவது ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை டிசம்பர் 5ஆம் தேதிக்குள் நிரப்பி முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12,524 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 320 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பவும், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணியிடங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரவவும் ஏற்பாடு நடக்கிறது. இது முறைப்படி நடத்தப்படாமல், நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணி நியமனத்தில் ஆளுங்கட்சி சிபாரிசும் இருக்கும், பணிக்கு இவ்வளவு என்று கட்டணமும் இருக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here