தொடர்மழையால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நாளை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆட்சியர்கள் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். புதுச்சேரியிலும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்ற அளவில் சூழ்நிலை உள்ளது என கூறப்படுகிறது.