சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு கடந்த 10ஆம் தேதி தான் ப்ரீத்தி என்பவருடன் திருமணமானது. இருவரும் தேனிலவிற்கு இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
நேற்று மதியம் குள்ளு மாவட்டம் தோபி ஏரியா பகுதியில் பாரா கிளைடிங் சென்றனர். முதலில் மனைவி சென்றுவிட்டு இறங்கி விட்டார். அதன் பிறகு ஹரிராம் என்பவருடன் கணவன் அரவிந்த் பாராசூட்டில் பறந்துள்ளார். அதனை மனைவி கீழே இருந்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அரவிந்த் உடலில் கட்டப்பட்டிருந்த பெல்ட் எதிர்பாராதவிதமாக கழன்று விழுந்ததில் அரவிந்த் மேலே இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். பாராசூட்டை இயக்கிய அரிராம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.












