ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ஆம் தேதிவரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சிறை அறைக்கு வெளியே அமர்ந்த நாற்காலியையும் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டார்கள். படுக்கையில்தான் அமர்ந்து வருகிறார். அவருக்கு தலையனைகூட இல்லை. இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது’என்றார்.
நீதிபதி அஜய் குமார் குஹர் சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யஅனுமதி அளித்தார். மருத்துவ பரிசோதனையில் சிறைவாசத்துக்கு பிறகு அவரது எடை 2.5 கிலோ குறைந்துள்ளது தெரியவந்தது.













