நெல்லையில் ஒரே நாளில் 79 கைது

0
503

நெல்லையில் ஒரே நாளில் 79 கைது நடவடிக்கையால் மாநகரமே கதிகலங்கி கிடக்கிறது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே கால்நடைகள் நடமாட்டம் இருந்து வந்தது. பசுக்கள் பஸ்களை மறித்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்தது.
இதனால் கவலையடைந்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் கால்நடைகளை பவுண்டில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சுறுசுறுப்பானார்கள். நேற்று மாநகராட்சியின் நாலாபுறமும் கயிறுகளுடன் திரிந்த மாநகராட்சி ஊழியர்கள் நின்றிருந்த, படுத்திருந்த கோமாதாக்களையும், கோபிதாக்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். ஒரே நாள் பகலில் மட்டும் 79 மாடுகளை பிடித்து பவுண்டில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here