பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர் 72 மணி நேர அவகாசம் வழங்கிய நிலையில், சிவசேனா ஆட்சியமைக்க 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தது அரசியல் உள்நோக்கமுடையது என சர்ச்சை கிளம்பிய சூழலில் மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை அதற்கான விளக்கம் அளித்துள்ளது.
‘சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால், ஆதரவு கடிதம் தரவில்லை. ஆதரவு இல்லாததால் 3 நாட்கள் அவகாச்ம தரமுடியாது என ஆளுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று ஆளுநர் மாளிகை செய்தி தொடர்பாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














