நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி நாங்குநேரி டோல்கேட் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிமுக தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டிருந்தது. முகப்பு பகுதியில் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்திலையில் நாங்குநேரில் இன்று பிற்பகல் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அலுவலக முகப்பு சரிந்து விழுந்தது. தேர்தல் பணிக்காக கட்சியினர் வெளியே சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.









