தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் தாலுகா குறிப்பன்குளம் ஊரை சேர்ந்த விவசாயியான லட்சுமணன் மகன் சுப்பிரமணியன். இவர் விழுப்புரம் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப கல்வியும், மாயமான்குறிச்சி பள்ளியில் நடுநிலை கல்வியும்,நல்லூர் பள்ளியில் உயர்நிலை கல்வியும் பயின்றவர். கல்லூரி படிப்பை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் தொடர்ந்தார்.
மிகவும் சாதாரண குடும்பத்தில் குறிப்பன்குளத்தில் பிறந்து இன்று உயரிய நிலையை அடைந்ததை குறிப்பன் குளம் கிராம மக்கள் கொண்டாடினர் .
தங்கள் பணி மென்மேலும் சிறக்க ஊர் மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.