திட்டக்குடி அருகே உள்ள வையங்குடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் செல்லக்கிளி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆண் வாரிசு வேண்டும் என்ற கணவனின் ஆசையை நிறைவேற்றிவைக்க மனைவி முன்வந்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழிமுறை ‘கடத்தல்’. ஆம், பக்கத்து வீட்டு சிறுமியை கடத்திச்சென்று கணவருக்கு கழுத்தை நீட்டவைத்தார் செல்லக்கிளி.
அதனால் இப்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு கூண்டுக்கிளி ஆகிவிட்டார். அசோக்குமாரையும் கைதுசெய்து சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.