பாளை கேடிசி நகர் அருகே அப்துல் ரகுமான் முதலாளிநகர் குடியிருப்பு பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு மர்ம பொருள் வெடித்து சிதறியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். போலீசார் வெடிகுண்டு நிபுணருடன் சென்று அந்த மர்ம பொருள் வெடிகுண்டா, எவ்வகையை சேர்ந்தது என்று ஆய்வு செய்தனர். முடிவில், அது விழாக்களில் பலத்த சத்தத்துடன் வெடிக்கவைக்கப்படும் அணு குண்டு என்றும், அதை யாரோ பகை நோக்கில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் போர்டிகோவில் வீசியதால் வெடித்து சிதறியது, சேதம் ஏதுமில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.









