அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. நிலத்துக்கு உரிமை கோரும் ராம் லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. சர்ச்சைக்குரிய நிலம் ராம் லல்லா என்கிற அமைப்புக்கே சொந்தம்.
நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கிய அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர், சீதாவை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உட்பகுதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். இஸ்லாமிய முறைப்படியே மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.
நிலத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம்.
2.77 ஏக்கர் நிலத்தை ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கவேண்டும். ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள மாற்று இடம் வழங்க வேண்டும். அதற்காக சன்னி வாரியத்துக்கு அவர்கள் ஏற்கும் வகையில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
சன்னி வஃபு வாரியம், நிர்மோஹி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.















