இந்திய அரசு கொண்டுவந்த மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.அந்த நாளான 1956 நவம்பர் 1 முதல் தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
பிற மாநிலங்கள் உதயமான நாளை சிறப்பாக கொண்டாடுவதால் தமிழ்நாடு அரசும் இந்நாளை கொண்டாடவேண்டும் என பல்வேறு அமைப்பினர் குர்ல கொடுத்தனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழ்நாடு தினமாக அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது.
இன்று கோட்டையில் சிறப்பாக கொண்டாடப்படும் அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் இக்கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன.
மாநில பிரிவினையின்போது இழந்த தமிழர் பகுதிகளில் இன்னமும் இரண்டம் தர குடிமக்களாக இருப்பதால் அது குறித்து இந்நாளில் அரசும் மக்களும் சிந்திக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.