தூத்துக்குடி தாளமுத்து நகர், தாய்நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் அரிவாளைக் காட்டி பயணிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றாராம். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.







