சாத்தான்குளம் பலே திருடன் கைது : 126 பவுன் நகை, ரூ.48.5 லட்சம் பொருட்கள் பறிமுதல்

0
586

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 126 பவுன் நகைகள், ரூ.48.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், டி.வி உள்ளிட்ட பொருட்களை திருடியவரை சாத்தான்குளம் போலீசார் கைதுு செய்தனர.

சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார இன்று அதிகாலை பன்னம்பாறை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவர் சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் கொடிமலர் (40) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளிலும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளிலும் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குளிலும் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்த 126 பவுன் எடையுள்ள தங்க நகைகள், திருட்டு பணத்தில் வாங்கிய ஸ்கூட்டர், கலர் டிவி என மொத்தம் ரூபாய் 48,42,000/- மதிப்புள்ள பொருட்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

துரிதமாக செயல்பட்டு பிரபல திருடனை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்த சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள், காவல் ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலைக் காவலர் சுதன், காவலர்கள் அகஸ்டின் உதயகுமார் மற்றும் . அருண்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here