டில்லி, துக்ளகாபாத்தின் வனப்பகுதியில், கவிஞர் குரு ரவிதாஸின் கோவில் இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கோவில், கடந்த 11ம் தேதி இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவில் இருந்த பகுதியில், மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்து, போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 95 பேரை போலீசார் கைது செய்தனர்.













