திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் இறந்ததற்கான போஸ்ட்மார்ட்டம் சர்டிபிகேட் கேட்டு அணுகிய போது அதை தாமதப்படுத்தி அவரை அலைக்கழித்ததாகவும், தவறான முறையில் அணுகியதாகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வக மருத்துவர் ஒருவர் மீது டீன் ரேவதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அம்மருத்துவரை உடனடியாக வேறு பிரிவுக்கு மாற்றியதோடு, புகார் குறித்து விசாரிக்க மூன்று டாக்டர்கள் அடங்கிய குழுவையும் டீன் ரேவதி துரிதமாக அமைத்தார். விசாரணை குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.