இறந்து விட்டதாக கூறி குழந்தைகளை விற்ற தொண்டு நிறுவனத்தினர் 7பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

0
1073

மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டிவந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கிய கல்மேடு பகுதியை சேர்ந்த சகுபர்சாதிக் – அனிஸ்ராணி, இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பவானி மற்றும் இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான கலைவாணி, முகவர்களாக செயல்பட்டுவந்த செல்வி, ராஜா என 7பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கு முன்பாக மதுரை அரசு கொரோனா மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மாதார்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here