கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைப் பகுதியில் இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் மரக்கன்று நடப்படவுள்ளதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.
களியக்காவிளை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் வி.சி. ரமாதேவி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். குலசேகரம் பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியை பேரூராட்சி செயல் அலுவலர் தொடங்கி வைத்தார் அருமனை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பள்ளிக் கல்லூரிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் திற்பரப்பு அருவிப் பகுதி முதல் பேரூராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.