எம்பியாகிறார் முன்னாள் பிரதமர்

0
1412

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, பா.ஜ., சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த, மதன் லால் சைனி, சமீபத்தில் இறந்தார். ராஜ்ய சபாவில், அவரது இடம் காலியானது.

ராஜஸ்தானில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், இங்கிருந்து, ஒரு ராஜ்யசபா, எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவுக்கு, காங்கிரசுக்கு சட்டசபையில் பலம் உள்ளது இதையடுத்து, இந்த இடத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை போட்டியிட வைக்க, காங்., மேலிடம் முடிவு செய்தது.

இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில, காங்., தலைவருமான, சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here