தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து மேலும் ஒரு பாடல் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடிய வெறித்தனம் என்ற பாடல்தான் இணையத்தில் கசிந்துள்ளது.
பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் ரிலீஸானது. இதைத்தொடர்ந்து படக்குழு அந்த பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இதே போல் தான் நடிகர் விஜய் பைக் ஓட்டும் காட்சி ஒன்றும் படத்தில் வைரலானது. இப்படியே போனால் தீபாவளிக்குள் மொத்த படமும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து விடும் போல என கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்கள்.
அதே நேரத்தில் வெறித்தனம் பாடல் உண்மையிலேயே லீக்கானதா, அல்லது விஸ்வாசம் ஹேஷ்டேக் ட்ரென்ட்டானதால் படக் குழுவினரே இந்த வேலையை பார்த்தனரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அந்த குரல் விஜயின் குரல் போல் இல்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.