இன்று தமிழகத்தில் இரு கொள்ளையர்களிடமிருந்து 13 கிலோ நகையும் 30 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடையில் கன்னமிட்டு கொள்ளையடித்த முருகன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் 13 கிலோ நகையை கைப்பற்றினர்.
அதேபோல், கட்டணக்கொள்ளையடித்த நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நீட் பயிற்சி மையம் நடத்தியவர்களிடமிருந்து வருமான வரித்துறையினர் ரூ.30 கோடி பணம் கைப்பற்றியுள்ளனர்.
முருகன் கொள்ளையடித்த நகை ஒரு முட்புதரிலிருந்தும், கல்வி நிலைய நிர்வாகி பதுக்கிய பணம் ஆடிட்டோரியத்தில் இருந்தும் கைப்பற்றப்பட்டது. அவர் ரூ.150 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளார். முருகன் வரி ஏய்ப்பு செய்ததாக தெரியவில்லை.












