சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு வந்த உறவினர் ஒருவர் தோசை கேட்டதால் பைக்கில் சாத்தான்குளம் சென்று வாங்கி வந்துள்ளார்.
வரும் வழியில் பைக் கவிழ்ந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் வரவழைத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்தார்.
இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.