பாளை.ரெட்டியார்பட்டி பைக் மீது கார் மோதியதில் 2 மருத்துவக் கல்லூரி மாணவிகள் உட்பட மூவர் பலி

0
1011

குமரி மாவட்டம் கொட்டாரத்தில் மருத்துவமனை நடத்துபவர் டாக்டர் குணசேகரன். இவரது மனைவி அன்பரசி ராமநாதபுரத்தில் மருத்துவராக உள்ளார் அவரை அழைத்து வருவதற்காக இன்று டாக்டர் குணசேகரன் ஒரு காரை அனுப்பினார்.

காரை சந்தோஷ் என்பவர் ஓட்டினார் அவர் திருச்செந்தூருக்கு செல்லவேண்டிய சண்முகசுந்தரம், பெருமாள் ஆகிய தனது நண்பர்கள் இருவரையும் காரில் அழைத்து வந்திருந்தார்.

பாளை. ரெட்டியார்பட்டி மலைப்பகுதியை தாண்டியதும் ரோட்டிலே தண்ணீர் கிடந்ததால் டிரைவர் பிரேக் அடித்துள்ளார் ஆனால் பிரேக் பிடிக்காமல் வண்டி வழிக்கு சென்று நடுவே இருந்த மீடியனை உடைத்துக்கொண்டு எதிர்ப்பக்கமாக பாய்ந்தது.

எதிர்ப்பக்கமாக நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு பயந்து கொண்டிருந்த கீழப்பாவூரை சேர்ந்த திவ்யா காயத்ரி, மதுரையைச் சேர்ந்த பிரிட்டோ ஏஞ்சலின், கடையநல்லூரை சேர்ந்த திவ்யா பாலா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

கார் அவர்கள் மீது மோதி தள்ளிச்சென்றது. இதில் திவ்யா காயத்ரி பிரிட்டோ ஏஞ்சலின் ஆகியோர் அதே இடத்தில் பலியானார்கள். திவ்யா பாலா கவலைக்கிடமான நிலையில் நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம் இந்த விபத்தில் பலியானார். டிரைவர் சந்தோஷும் பெருமாளும் சிறிய காயங்களுடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தை நெல்லை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here