நெல்லை தொகுதி வாக்கு எண்ணிக்கை 10 சுற்றுகள் முடிந்து 11-வது சுற்று தொடங்கிய போது விவிபேட் காட்டிய எண்ணுக்கும் தேர்தல் முகவர்களிடம் அளிக்கப்பட்ட தொடர் எண்ணுக்கும் வேறுபாடு காணப்பட்டதால் திமுக முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது எழுத்துப்பிழை என்ற தேர்தல் அலுவலரின் சமாதானத்தை முகவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.