நாங்குநேரியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அதிமுக, திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் பிரபலங்களை தேடி ஆதரவு கேட்டு வருகின்றனர். அப்படியே செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விஜிலா சத்யானந்த் எம்பி உள்ளிட்ட அதிமுகவினர் பாளையங்கோட்டையில் உள்ள தமமுக தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
அவரோ, ‘ தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி ஒரே பெயர் கேட்டும் அதற்கு அரசாணை பிறப்பிக்கவில்லை. முதல்வர் அவரது உதவியாளரை தொடர்பு கொள்ளச்சொன்னார். அவரோ, ஃபோனையே எடுப்பதில்லை. எனவே, ஆதரவு தருவது பற்றி சிந்திக்க வேண்டும்’ என்று கூறி வழியனுப்பிவைத்துவிட்டார்.
அமைச்சர் குழாம் ஏமாற்றத்துடன் காரிலேறி திரும்பியது.















