தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளான முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகள் திருநேல்வேலி நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
ஆனால் தூத்துக்குடி 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு தான் அரசின் அனைத்து துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளது. இதனால் அரசின் எந்த நலத்திட்டங்களையும் பொதுமக்களால் உடனடியாக பெற இயலவில்லை.
ஆகையால் முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக முத்தாலங்குறிச்சி கிராம சபை கூட்டத்தில் முத்தாலங்குறிச்சி ஊராட்சிகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.









