ஊரெல்லாம் அடைப்பு நாசரேத்தில் மட்டும் திறப்பு – கலெக்டர் உத்தரவு பல்லிளிப்பு

0
451

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,ஏரல் தாலுகா பகுதிகளில் 10 மற்றும் 11.12ஆம் தேதிகளில் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி 26 கடைகள் அடைக்கப்பட்டன .

ஆனால் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட நாசரேத்தில் மட்டும் மதுக்கடை திறக்கப்பட்டு மூன்று நாட்களும் திருப்தியாக சப்ளை செய்யப்பட்டன.. இதனால் மற்ற தாலுகாவில் குடிமக்கள் பஸ் ஏறி வந்து நாசரேத் டாஸ்மாக்கில் தாக சாந்தி செய்து திரும்பினர்.

ஒவ்வொரு வருடமும் இந்த சேவை தொடர்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுகிறது. வரும் ஆண்டுகளில் நாசரேத்தில் உள்ள மதுக் கடைகளை அடைப்பார்களா பார்ப்போம் என்று ஊர் மக்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here